1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2016 (14:10 IST)

நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

திமுக தலைவர் கருணாநிதி திடீர் உடல் நலக்குறைவால் மீண்டும் சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். கடந்த 1-ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு 7-ஆம் தேதி உடல் நலம் தேறி வீடு திரும்பியிருந்தார் அவர்.


 
 
இந்நிலையில் நேற்று நள்ளிரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு சளி பிரச்சனை அதிகமாக அவர் மீண்டும் உடனடியாக அவசரமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்க்க திமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
 
இதனையடுத்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக, சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
 
தொற்றை சரிசெய்வதற்கான சிகிச்சைகள் தரப்படுகிறது. மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநிலங்களவை உறுப்பினரும் கருணாநிதியின் மகளுமான கனிமொழி அவரது உடல்நிலை தற்போது சீராகிவிட்டதாக கூறியுள்ளார்.