1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (09:16 IST)

விஜயகாந்த் காலில் விழுந்து கதறிய வேட்பாளர்களின் மனைவிகள்

விஜயகாந்த் காலில் விழுந்து கதறிய வேட்பாளர்களின் மனைவிகள்

பணத்தை திரும்ப தருமாறு, விஜயகாந்தின் காலில் விழுந்து  தேமுதிக வேட்பாளர்களின் மனைவிகள் கதறி அழுதனர்.


 


கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து 106 இடங்களில் போட்டியிட்டனர். இதில்  அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில் தே.மு.தி.க.,சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர்களிடம் கட்சி மேலிடம் முன்பணமாக பல லட்சம் ரூபாய் வசூலித்தது.

மேலும், வேட்பாளர்களும் கடன்வாங்கி தேர்தலுக்கு செலவிட்டனர். கட்சிக்கு கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு விஜயகாந்திடம் வேட்பாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக, கட்சி மேலிடத்தில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், சென்னை தே.மு.தி.க.,அலுவலகத்தில், வேட்பாளர்களின் மனைவிகள் ஒன்று சேர்ந்து, விஜயகாந்த் காலில் விழுந்து, கதறி அழுது, தங்கள் பணத்தை தருமாறு கேட்டனர்.