வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (15:32 IST)

சாதனை படைத்தது திமுக – வேலூரில் அமோக வெற்றி

வேலூர் மக்களவை தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு வெற்றிவாகை சூடியது திமுக.

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதி ஆனந்தும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ண தொடங்கியதிலிருந்தே அதிமுக முன்னிலையில் இருந்தது. 11 மணிக்கு மேல் திமுக வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்த சுற்றுகளில் திமுக கணிசமான வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்க தொடங்கியது. எனினும் 10000 ஓட்டுகள் வித்தியாசத்திலேயே இரண்டு கட்சிகளும் நீடித்து வந்ததால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் வலுவாக இருந்தது.

21 சுற்று முழுவதுமாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 477199 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இருவருக்கும் இடையே 8141 வாக்குகளே வித்தியாசம் இருந்தது.

திமுகவின் வெற்றியை தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.