திமுகவும், அதிமுகவும் அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
1974ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுகவும், அதிமுகவும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்ட பொன் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”1974ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுகவும், அதிமுகவும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இப்போது அதுபற்றி பேசிவருவது நியாயமா?
பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையையும் ஏற்கமாட்டோம்.
தமிழ்நாட்டில் உளவுத்துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஐ.ஏ.எஸ். உளவாளி திருப்பூரில் தங்கி இருந்தது வேதனைக்குரியது. உளவுபடை இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் இதேபோல் அனைத்து கட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட வேண்டும்” என்றார்.