தேமுதிக எங்க கூட்டணிக்கு வரணும்: அன்புமணி ராமதாஸ்
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என பாமக விரும்புவதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தருமபுரியில் வறட்சியை போக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி காவிரி பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது தொடர்பாக மீண்டும் வலியுறுத்தியதாக தெரிவித்தார். தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்பது தங்கள் எண்ணம் என்றும் தெரிவித்தார்.