பாதிக்கும் மேல் சரிந்த தீபாவளி வியாபாரம்.. திநகர் வியாபாரிகள் சொல்வது என்ன?
தீபாவளி என்றாலே சென்னை திநகர் பகுதிக்கு லட்சக்கணக்கான மக்கள் பர்சேஸ் செய்ய வருவார்கள் என்ற நிலையில், நேற்றைய தினத்தில் பாதிக்கு மேல் வியாபாரம் குறைந்துள்ளதாக தியாகராய நகர் கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தீபாவளி பர்சேஸ் செய்ய முந்தைய நாளில் பொதுமக்கள் ஏராளமாக குவிந்து வருவார்கள் என்பது தெரிந்தது. ஆனால், இந்த வருடம் மழை காரணமாக தீபாவளி பர்சேஸ் செய்ய வந்த பொதுமக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஆன்லைன் பல சலுகை விற்பனை அறிவிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து நேரில் வந்து பர்சேஸ் செய்யும் ஆர்வம் பொதுமக்களிடம் குறைந்துவிட்டதாகவும் தியாகராய நகர் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் நடந்த வியாபாரத்தை விட தீபாவளிக்கு முந்தைய நாள் வியாபாரம் நேற்று பாதிக்கும் குறைவாக இருந்ததால், வியாபாரிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Edited by Siva