வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 10 ஜூன் 2018 (15:53 IST)

அம்மா அணியிலிருந்து அண்ணா திராவிடர் கழகமாக மாறிய திவாகரனின் கட்சிப் பெயர்

சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டது. முதலில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன், சசிகலா சிறை சென்றதற்கே தினகரன் தான் காரணம் என குற்றம் சாட்டினார்.
 
மன்னார்குடியில் திடீரென திவாகரன் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார்.
இந்நிலையில் மன்னார்குடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், தனது கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் வெளியிட்டார். முன் வெளியிட்ட அம்மா அணி என்ற கட்சியின் பெயரை மாற்றி, தற்பொழுது அண்ணா திராவிடர் கழகம் என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளதாகவும், கட்சிக்கான கொடியையும் வெளியிட்டுள்ளார் திவாகரன். ஒவ்வொரு நாள் ஒருவர் கட்சியை துவங்குகின்றனர் என பலர் கிண்டலடித்து வருகின்றனர்.