1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (13:50 IST)

திவாகரனை அழைத்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள்: கைது நடவடிக்கையா?

இன்று காலை சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் ஆரம்பித்த வருமான வரித்துறையினர்களின் சோதனை சசிகலா குடும்பத்தினர்கள் அனைவரையும் வளைத்துவிட்ட நிலையில் சற்றுமுன்னர் மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனை வருமான வரித்துறையினர் தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.



 
 
திவாகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கவே அவர் அலுவலகம் அழைத்து செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் விளக்கம் கேட்ட பின்னர் கைது நடவடிக்கை இருக்குமா? என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை இல்லை
 
ஆனால் சசிகலா குடும்பத்தினர் அனைவரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடந்து வருவதால் இன்று மாலை ஒருசில கைது நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.