புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (13:21 IST)

தேய்ந்துப்போன டயரை வைத்து கட்சி நடத்தும் ஸ்டாலின்!! திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல்

தேய்ந்துப்போன டயரை வைத்து கட்சி நடத்துவது தான் திமுக தலைவர் ஸ்டாலினின் வழக்கம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..

“மதுரையில் ராஜகண்ணப்பன் திமுகவில் இணைந்ததை முக ஸ்டாலின் பெரிய விஷயம் போல் பேசி வருகிறார். நாமெல்லாம் சைக்கிளில் டயர் தேய்ந்துவிட்டால் அதை மாற்றி விட்டு புதிய டயரை மாற்றி ஓட்டுவோம். ஆனால் பழைய டயரை வைத்து கட்சி நடத்துவது தான் திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கம்” என விமர்சித்துள்ளார்.