திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (10:25 IST)

லட்சிய கனவு காணுங்கள்.. அப்துல் கலாமின் நினைவுகளை பகிர்ந்த டிடிவி தினகரன்..!

லட்சிய கனவு காணுங்கள் என இளைஞர்களின் உந்துசக்தியாக இருந்த மறைந்த முன்னாள் குயரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று.
 
எளிய குடும்ப பின்னணியில் பிறந்து கல்வியால் படிப்படியாக முன்னேறி இலக்கை எட்டிப்பிடித்து தன் வாழ்நாள் முழுவதும் இளைஞர்களின் முன்னுதாரணமாக வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அப்துல்கலாம் அவர்கள்.
 
நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் பதவி வகித்த போதிலும் ஒரு எளிய மனிதரைப் போல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாட்டு மக்களிடம் பேரன்பு கொண்டிருந்தவர்.
 
கல்வி, விஞ்ஞானம், வான்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா மேலும் பல சாதனைகளை எட்ட மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.
 
Edited by Mahendran