ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (16:26 IST)

தினகரனுக்கு சிக்கல்: அப்ரூவர் ஆன உதவியாளர் ஜனார்த்தனன்!

தினகரனுக்கு சிக்கல்: அப்ரூவர் ஆன உதவியாளர் ஜனார்த்தனன்!

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் டெல்லி போலீசார்.


 
 
தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன் இந்த விவகாரத்தில் முக்கிய நபராக செயல்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஜனார்த்தனிடம் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அனைத்தையும் கூறியதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் திடீர் திருப்பமாக ஜனார்த்தனன் அப்ரூவர் ஆகி இருப்பதாகவும், சாட்சியாக மாறவும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
 
மேலும் கொளப்பாக்கத்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவன மேலாளராக பணியாற்றும் பிலிப்ஸ் டேனியல் என்பருக்கும், ஆதம்பாக்கத்தை உள்ள மான்னார்குடியை சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகன் என்பவருக்கும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.