Daily Horoscope
✕

மேலும் 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு - அதிர்ச்சி கிளப்பும் திவாகரன்

Written By Murugan
Updated: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (14:46 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளனர்.


 

 
தினகரனையும், சசிகலாவையும் ஒதுக்கிவிட்டு ஓ.பி.எஸ் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றினைந்துள்ளது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை ஆளுநரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், எடப்பாடி பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் கூறியுள்ளனர். 
 
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் “தினகரன் பக்கம் 19 எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல. மேலும் 8 எம்.எல்.ஏக்கள் எங்களுடன் பேசி வருகிறார்கள். அவர்களின் ஆதரவும் எங்களுக்குத்தான் உண்டு. ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அமைச்சரவை அமைய வேண்டும். சபாநாயகர் தனபாலை முதல்வராக நியமிக்க வேண்டும்.
 
அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை வைத்துக்கொண்டு மத்திய அரசு சித்து விளையாட்டை காட்டி வருகிறது” என கூறினார்.

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments