வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (12:23 IST)

மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி! முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!!

MK Stalin PM
இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல, ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி என்றும் இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?” என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
 
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? என்றும் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
 
சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படிடிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

 
இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல, ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி என்றும் இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?” என்றும் முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.