1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (06:58 IST)

2வது நாளாக குறைந்தது டீசல் விலை: இன்றைய நிலவரம்

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக தமிழக அரசின் பட்ஜெட்டில் பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் விலை மட்டும் மூன்று குறைந்தது
 
இந்த நிலையில் நேற்று திடீரென டீசல் விலை 19 காசுகள் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இது பொதுமக்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக டீசல் விலை மீண்டும் குறைந்துள்ளது. இன்று டீசல் விலை 18 காசுகள் குறைந்துள்ளது அடுத்து 94.02 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதால் நேற்றைய விலையான ரூபாய் 99.47 என்ற நிலையில்தான் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெட்ரோல் விலையை தமிழக அரசின் வரி காரணமாக குறைக்கப்பட்ட நிலையில் டீசல் விலை தற்போது எண்ணெய் நிறுவனங்களால் குறைந்து வருவது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது