செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2024 (11:39 IST)

விஜய் நடத்திய மாநாட்டால்தான் விக்கிரவாண்டியில் வெள்ளம் வந்துச்சா? - விஜய்க்கே குட்டிக்கதை சொன்ன லியோனி!

Vijay Vs Leoni

விக்கிரவாண்டியில் விஜய் நடத்திய மாநாட்டால்தான் அங்கு வரலாறு காணாத வெள்ளம் வந்ததாக சிலர் பேசிக் கொள்வதாக திமுக கொ.ப.செ லியோனி பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

 

 

நடிகர் விஜய் அரசியலில் இறங்கி தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில், விக்கிரவாண்டியில் அவர் நடத்திய முதல் மாநாட்டிற்கு பல லட்சம் மக்கள் திரண்டதால் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் புதிதாக அரசியல் களத்திற்குள் வந்திருக்கும் விஜய் பிற கட்சி பிரமுகர்களின் விமர்சனங்களுக்கும் தொடர்ந்து உள்ளாகி வருகிறார்.

 

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பேரும் பட்டிமன்ற பேச்சாளரும் திமுக கொ.ப.செவுமான திண்டுக்கல் லியோனி, தொடர்ந்து விஜய்யை விமர்சித்து வருகிறார்.

 

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மாங்காடு நகர திமுக சார்பாக நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, “விக்கிரவாண்டியல ரெண்டு கிழவிகள் டீக்கடையில பேசிக்கிட்டாங்க. ஒரு கிழவி கேக்குது, 65 வயசு ஆவுது எனக்கு, இதுவரைக்கும் விழுப்புரத்துல இப்படி ஒரு வெள்ளம் வந்து கேள்விப்பட்டிருக்கோமா? வெள்ளம் வந்து ஆடு, மாடெல்லாம் அடிச்சிட்டு போனத என் கண்ணால பாத்ததே இல்ல. ஏன் ஆத்தா இப்படி நடக்குதுன்னு கேக்குது.

 

அதுக்கு இன்னொரு கிழவி சொல்லுது, என்னைக்கு இந்த பாழா போன பயலுங்க விக்கிரவாண்டில வந்து மாநாடு போட்டாங்களோ அன்னைக்கு விளங்காம போனதுதான் விழுப்புரம்னு சொல்றாங்க” என சொல்லிவிட்டு, ‘இத நான் சொல்லலப்பா, ரெண்டு கிழவிகள் பேசிட்டு இருந்ததை ஒட்டுக்கேட்டேன் நான்’ என பேசியுள்ளார்.

 

தொடர்ந்து விஜய்யை விமர்சித்து லியோனி பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் திமுக Vs தவெக மோதலை உருவாக்கும் போக்கிற்கு வழி வகுப்பதாக சமூக வலைதளவாசிகள் பேசிக் கொள்கின்றனர்.

 

Edit by Prasanth.K