சசிகலா பெயரை பயன்படுத்தாமல் வாக்கு சேகரிக்க டிடிவி தினகரன் சூட்சமம்
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் டிடிவி தினகரன் என்றும், அனைவரும் வாக்களிப்பீர் என்றும் சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இதில் சசிகலா புகைப்படம் மற்றும் அவரது பெயர் எதுவும் இடம்பெறவில்லை. ஜெயலலிதா புகைப்படம் மட்டும் இடம்பெற்றுள்ளது. சின்னம்மா புகழ் பாடும் அதிமுக கட்சியினர் இதுபோன்ற போஸ்டர் ஒட்டியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
இதன்மூலம் டிடிவி தினகரன், ஒருவேளை சசிகலா புகைப்படம் கொண்ட போஸ்டர் ஒட்டினால் கிடைக்கிற வாக்கு கூட கிடைக்காமல் போய்விடுமோ என எண்ணி இருப்பார் போல. தற்போது இந்த போஸ்டர் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. வாக்கு சேகரிக்க சசிகலாவை புறம் தள்ளிய அதிமுக கட்சியினர் என்று குறிப்பிடலாம்.