புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 நவம்பர் 2018 (14:04 IST)

நாங்களும் மனுசங்கதாம் பா!! எங்களுக்கும் உதவுங்க: குமுறும் டெல்டா மாவட்ட மக்கள்

டெல்டா மாவட்ட மக்கள் கஜா புயலால் இடிந்து போயுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
கஷ்டப்பட்டு கடன் வாங்கி தென்னை, வாழை, நெற் பயிர்களை பயிரிட்டு அதன் அறுவடைக்காக காத்திருந்த விவசாய பெருமக்கள் இந்த கஜா புயல் செய்த வேலையால் அனைத்தும் இழந்து நிற்கதியாய் தவிக்கின்றனர்.
 
அடுத்து பயிருக்காக வாங்கிய கடனை கட்ட சொல்லி வங்கியிலிருந்து வருவார்களே, அவர்களிடம் என்ன பதில் சொல்வது. வட்டிக்கு பணம் வாங்கிய இடத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் கதிகலங்கிப் போய் உள்ளனர். நேற்று திருச்சியில் ஒரு விவசாயி கஜா புயலால் தற்கொலை செய்துகொண்டார்.
 
சென்னையில் வர்தா புயல் ஏற்பட்ட போது  பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஓடிப்போய் உதவி செய்தனர். துணி, உணவு, பிஸ்கட், நாப்கின்கள், மெழுகுவர்த்திகள் என நிவாரணப்பொருட்கள் நாடெங்கிலிருந்தும் சென்னைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த கஜா புயலால் நிலை குலைந்து போயிருக்கும் எங்களுக்கு பெரிதாக யாரும் உதவவில்லை என டெல்டா மாவட்ட மக்கள் வேதனையுடன் தங்கள் மனக் குமுறல்களை தெரிவித்துள்ளனர்.
 
இந்த நேரத்தில் மற்ற மாவட்ட மக்கள் ஒன்றிணைந்து நமக்கு சோறு போடும் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.