தீபாவின் வேட்புமனு ஏற்பு: தேர்தல் ஆணையம் அதிரடி!

தீபாவின் வேட்புமனு ஏற்பு: தேர்தல் ஆணையம் அதிரடி!

வெள்ளி, 24 மார்ச் 2017 (15:38 IST)
ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் அவரது வேட்புமனுவை ஏற்பதாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.


 
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. முக்கிய வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை சேர்ந்த தீபா நேற்று பிற்பகலில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
 
இதனையடுத்து அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கலாம் என காலை முதலே தகவல் வந்தவாறு இருந்தது. வேட்புமனுவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக கூறப்பட்டது. கணவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சொத்து விபரங்கள் சரியாக இல்லை எனவும், கணவரின் சொத்து உள்ளிட்ட எந்த விபரமும் அதில் குறிப்பிடவில்லை. இதுபோன்ற பல காரணங்களுக்காக தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்படும் என கூறப்பட்டது.
 
ஆனால் வதந்திகளுக்கு எதிராக தீபாவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தீபாவுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நாளை முதல் ஆர்கே நகரில் ஆட்டோவில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

டாஸ்மாக் தனியார் மயம் ஆகுமா?.. மதுவிலக்குத்துறை அமைச்சர் சொல்வது என்ன?..

வளைகுடா நாட்டு தனித்தேர்வர்களுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியாத மம்தா பானர்ஜி.. உடைகிறது திரிணாமுல் காங்கிரஸ்

ஒரு பெரிய தலைவரை மிஸ் பண்ணிட்டோம்!.. பெரிய கனவு இருந்தது!.. லதா ரஜினிகாந்த் பேட்டி..

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

அடுத்த கட்டுரையில்
Show comments