1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (16:11 IST)

ஸ்டாலின் தலைமையில் மீண்டும் கண்டனக் கூட்டம்!

தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டணத்தை எதிர்த்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில். வரும் 13-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மீண்டும் அனைத்து கட்சி கண்டன பொதுகூட்டம் நடைபெறுகிறது.  

 
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி பொது கூட்டத்தில்  திமுக ,காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
 
ஏற்கனவே ஜனவரி 27 மற்றும் 29-ம் தேதிகளில், தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக தலைமையில் அனைத்து கட்சி கண்டன போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் மீண்டும் பேருந்து கட்டணத்தை கண்டித்து 13-ஆம் தேதி அனைத்து கட்சி கண்டன போராட்டம் நடைபெறவுள்ளது.