Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாசம்தான் உங்கள் கடைசி ஆயுதமா?!.. ஸ்டாலினுக்கு சிடி நிர்மல்குமார் கேள்வி..

Updated: ஞாயிறு, 13 செப்டம்பர் 2026 (11:50 IST)
சமீபத்தில் சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் விஜய் ‘எதற்கெடுத்தாலும் திமுக நாங்கள் மிசாவை பார்த்தவர்கள்’ என்கிறார்கள்.. ஆனால் மிசா காலத்தில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெரியும் என்று சொல்லி திமுக தலைவர் ஸ்டாலினின் தாடை உடைக்கப்பட்டதை தனது சைகையால் செய்து காட்டினார்.. அந்த உடல்நிலை திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது..

அவருக்கு பின் பேசிய அமைச்சர் சிடி நிர்மல் குமார் ‘மிசா காலத்தில் கொலை, வழிப்பறி, கொள்ளை, பெண்கள் தொடர்பான வழக்குகள் என பல வழக்குககளில் பலரும் கைது செய்யப்பட்டனர்.. அப்போது ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார்.. ஆனால் மிசாவில் அவர் கைது செய்யப்பட்டதாக எங்கேயும் குறிப்பிடப்படவில்லை’ என கூறினார்.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் நேற்று கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. அதில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா ‘எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் சொல்ல வக்கற்ற ஒரு முதல்வர் இங்கே இருக்கிறார்.. ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என ஒரு அமைச்சர் பேசுகிறார்... நான் கேட்கிறேன் நீ யாருக்கு பிறந்தாய் என எனக்கு சந்தேகம் வருகிறது’ என்று பேசினார்.

ஆ.ராசாவின் இந்த பேச்சை பலரும் கண்டித்த நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டில் அமைச்சர் சிடி நிர்மல் குமார் ‘மேடை போட்டு என்னையும் என் தலைவரையும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்கள் கடைசி ஆயுதமா? ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் திமுகவினர் நடத்திய ஆபாச நாடகம் பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.. திமுகவினரின் தரமற்ற பேச்சுக்களை அவர்களின் குடும்பத்தினரிடம் காட்ட முடியுமா? தவெகவினர் இதை நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வார்கள்.. தமிழக அரசியலில் திமுகவினருக்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

அமைச்சர் கீர்த்தனா மீது அதிருப்தியில் விஜய்?.. அதான் லண்டனுக்கு கூட்டி போகலயா?!..

அஜித் கார் ரேஸ்!.. LE MANS கார் பந்தயத்தின் விதிமுறைகள் என்ன?..

இது லீடர்சிப் இல்ல!.. ஏமாத்துற வேலை!. விஜயை அட்டாக் பண்ணினாரா விஜய் சேதுபதி?!...

விஜய், நிர்மல்குமாரை அசிங்கமாக விமர்சித்த ஆ.ராசா!.. வலுக்கும் கண்டனம்!..

ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ரிலீஸ் எதிரொலி.. வெறும் ரூ.69,990க்கு ஐபோன் 17 ப்ரோ.. எப்படி வாங்குவது?

அடுத்த கட்டுரையில்
Show comments