புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (14:21 IST)

பேச்சுரிமைக்கு ஒரு வரம்பில்லையா ? – ரஞ்சித்துக்கு நீதிமன்றம் கேள்வி !

பேச்சுரிமை என்றால் அதற்கு ஒரு அளவு இல்லையா என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இயக்குனர் ரஞ்சித்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் பறிக்கப்பட்டதாகவும் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவதாசிகளாக மாற கட்டாயப்படுத்த பட்டதாகவும் கடுமையான விமர்சித்தார். பா. ரஞ்சித்தின் இந்தப் பேச்சுக்கு  சமுக வலைதளங்களிலும் ஆதரவும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ரஞ்சித்தின் பேச்சுக்கு இந்து அமைப்புகளும் இந்து மத அபிமானிகளும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்து அவரைக் கைது செய்ய வேண்டும் எனக் குரல் எழுப்பினர்.

ரஞ்சித்தின் இந்தப்பேச்சை எதிர்த்து திருப்பனந்தாள் போலீஸ் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. இதனால் எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவானது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரி ரஞ்சித் மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்று விசாரித்த நீதிபதி ரஞ்சித்தைக் கைது செய்ய ஜூன் 21  தடை விதித்தார். மேலும் ஜூன் 21 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க முடியாது என கூறினர். இதனால் ரஞ்சித் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது , பேச்சுரிமை என்றால் அதற்கென்று ஒரு வரம்பில்லையா என்று ரஞ்சித் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மேலும் ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.