ஈபிஎஸ் தொடுத்த மான நஷ்ட வழக்கு: ரூ.1.10 கோடி வழங்க தனபாலுக்கு நீதிமன்றம் உத்தரவு..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடுத்த மான நஷ்ட வழக்கில் தனபால் என்பவர் ரூ.1.10 கோடி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடநாடு கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி தனபால் என்பவர் பேசியிருந்த நிலையில், தனபால் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்து வரும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் தனக்கு எதிராக பொய்யான அவதூறு கருத்துக்களை தனபால் பேசி வருகிறார் என்று பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு படுத்தி பேசிய தனபால், ரூ.1.10 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார். மேலும் இனிமேல் அவரை அந்த வழக்கில் தொடர்பு படுத்தி பேசக்கூடாது என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva