புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (15:11 IST)

விஜய்யை விமர்சிப்பவர்கள் அவரை பார்த்து பயப்படுகிறார்கள் என்று அர்த்தம்: எஸ்வி சேகர்

விஜய், விஜய் என்று விமர்சனம் செய்பவர்கள், அவரை பார்த்து பயப்படுகிறார்கள் என்று அர்த்தம் என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

விஜய் தற்போது தான் அரசியல் களத்திற்கு வந்துள்ளார். இனிவரும் நாட்களில் விஜய் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்துதான் அவரது அரசியல் எதிர்காலம் அமையும். "விஜய், விஜய்" என்று யார் பேசுகிறார்களோ, அவர்கள் அவரை பார்த்து பயப்படுகிறார்கள் என்று அர்த்தம். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள், தமிழக வெற்றி கழகத்திற்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் போட்டி என்பது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் உள்ளது. விஜய்யின் வயதிற்கு அவர் இன்னும் ஆறு ஏழு தேர்தல்களை சந்திக்கலாம். "விஜய்யின் மாநாடு கூடிய கூட்டம் ஓட்டாக மாற வாய்ப்பில்லை" என்று எஸ்.வி. சேகர் கூறினார்.

 "உதயநிதி அரசியலுக்கு வருவதில் தவறில்லை. அவர் பத்தாண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கிறார், ஒரே ஒரு செங்கலை வைத்து நாற்பது எம்பிக்களை பெற்றவர்," என்றும் "அவர் வர வேண்டுமா வேண்டாமா என்பது திமுகவினர் தான் பேச வேண்டும்" என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.



Edited by Mahendran