வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (16:34 IST)

அதிகரிக்கும் கொரொனா தொற்று...

பள்ளிக்குச் சென்ற ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து கொரொனா அதிகரித்து வருகிறது.  

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப்பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

 இந்நிலையில் தமிழகத்தில் ஒன்றரை வருடம் கழித்து செப்டம்பர் 1 ஆம்தேதி மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.

அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளோடு பள்ளிகள் திறக்கப்பட்டது என்றாலும் நாமக்கால் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசுப் பள்ளயில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவிக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இன்று, திருப்பூரில் பளளி ஆசிரியைக்குக் கொரொனா உறுதியானது. கடந்த 3 நாட்களாகப் பள்ளிக்கு வந்து பாடம் நடத்தியதால் மாணவிகளுக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது.

அதேபோல் தஞ்சையில் அரசு குந்தவை நாச்சியாளர் மகளிர் கல்லூரி மகளிர் கல்லூரி மாணவிக்கு கொரொனா உறுதியானது கடலூரில் பள்ளிக்குச் சென்ற ஆசிரியைக்கு உடல்நலக்குறைக்கு ஏற்பட்டுள்ளது.   தமிழகத்தில் இதுவரை பள்ளி மாணவிகள் 5 பேர் கல்லூரி மாணவி ஒருவர் உள்ளிட்ட 2 ஆசிரியர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
 
பள்ளிக்குச் சென்ற மாணவிகள், ஆசிரியைகளுக்கு கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.