வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By caston
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (11:54 IST)

திமுகவில் குழப்பம்: கருணாநிதியா? ஸ்டாலினா முதல்வர் வேட்பாளர் யார்?

கடந்த சில தினங்களக திமுக வட்டாரத்தில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. சில தினங்களுக்கு முன்  லயோலா கல்லூரி 2016 சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதில்  அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியிருந்தாலும் மக்கள் மத்தியில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு  கருணாநிதியை விட ஸ்டாலின் அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த கருத்துக்கணிப்பு கூறியிருந்தது.

இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கருத்துக்கணிப்பின் பின்னனியில் ஸ்டாலின் இருக்கிறார் என அழகிரி பரப்ரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் என  பத்திரிக்கையளர் சந்திப்பில் அறிவித்தார். பின்னர் திமுக தரப்பிலிருந்து இதற்கு மறுப்பும் கண்டனமும் வந்தது. டி.கே.எஸ்.இளங்கோவனின் இந்த கருத்துக்கு பின்னனியில் ஸ்டாலின் தான் இருகிறார் என கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். கூட்டணி கட்சிகளும் இதனால் அதிருப்தியில் உள்ளனர். இந்த சம்பவங்களால் கருணாநிதியும்  மன வருத்தத்தில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
என்ன செய்தாலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது, அவரது தலைமையில் அணி சேர பயந்து தான் கூட்டணிக்கு எந்த  கட்சியும் வர மறுக்கிறது. கருணாநிதி தான் ஆறாவது முறையாக முதல்வராவார் என அழகிரி பேட்டி அளித்தார். இந்நிலையில்  திமுக வின் அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் மீண்டும் கிழம்பியுள்ளது... ஸ்டாலினா? கருணாநிதியா?... பொருத்திருந்து  பார்ப்போம்.