திமுக, அதிமுக மோதல் விவகாரம் : பெரியகருப்பனுக்கு நிபந்தனை ஜாமீன்
அதிமுக - திமுக மோதல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏ-வுமான கரு.பெரியகருப்பன் உள்ளிட்ட 12 பேருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற பரப்புரையின் போது, திமுக வேட்பாளர் கரு. பெரியகருப்பனும் அவரது ஆதரவாளர்களும் தங்களை தாக்கியதாக கூறி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கரு. பெரியகருப்பன் உள்ளிட்ட 12 பேரும் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோகுல்தாஸ், பெரியகருப்பன் உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.