வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (13:40 IST)

100 சதவீத கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது புகார்: அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுமா?

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கே பணம் இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் நிலையில் தனியார் பள்ளிகள் 100 சதவீத கட்டணம் வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து சமீபத்தில் தமிழக அரசு மற்றும் சென்னை ஐகோர்ட் தனியார் பள்ளிகள் அதிகபட்சமாக 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் 100 சதவீதம் கட்டணம் வசூலிப்பதாக புகார் செய்யப்பட்டால் அந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது
 
ஆனாலும் தொடர்ந்து ஒருசில தனியார் பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை வசூலித்ததாக தெரியவந்தது. இதனை அடுத்து தமிழக அரசு இமெயில் ஒன்றை அறிவித்து அதில் 100 சதவீதம் கட்டணம் வசூலித்த பள்ளிகள் குறித்து புகார் அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தது 
 
இந்த நிலையில் தற்போது 100 சதவீத கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. இதில் 34 பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் 74 பள்ளிகள் மீது பெற்றோர் அளித்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி 108 பள்ளிகள் 100 சதவீத கட்டணம் வசூலித்ததாக வெளிவந்துள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது