1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 9 மார்ச் 2018 (16:19 IST)

கல்லூரி மாணவி குத்திக் கொலை - சென்னையில் அதிர்ச்சி

சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி மாணவிய வாலிபர் ஒருவர் பட்டப்பகலில் குத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சமீபகாலமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பெண்கள் தொடர் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறனர். 
 
இந்நிலையில், இன்று மாலை 3 மணியளவில் சென்னை கே.கே.நகர் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி கல்லூரி வாசலில், அந்த கல்லூரியில் பி.காம் படித்து வரும் அஸ்வினி என்கிற மாணவியை, கல்லூரி வாயிலிலேயே ஒரு வாலிபர் கத்தியால் குத்தினார். 
 
இதில், அஸ்வினி மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அதிர்ச்சியடைந்த  பொதுமக்கள், அஸ்வினியை குத்திய வாலிபரை பிடித்து அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  அதன்பின், அஸ்வினியை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அஸ்வினி மரணமடைந்தார்.
 
இதையடுத்து, அஸ்வினியின் தோழிகள், கல்லூரி நிர்வாகம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளையும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.