1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

காலசர்ப்ப தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்....!

ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள். பொதுவாக ராகு-கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம்.
வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்? என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை. அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். மலையை  அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில் இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. அதில் இருந்து ஒரு பகுதிக்குதான்  திருகாளஹஸ்தி என்ற நாமம் சூட்டப்பட்டது.
 
திருக்காளஹஸ்தி திருக்கோயிலில் சிவனின் அருகே இருக்கும் தீப சுடர் ஒன்று மட்டும் எந்நேரமும் காற்றில் அசைந்து கொண்டெ இருக்கும். சிவபெருமானின்  மூச்சி காற்றுபட்டு தீப சுடரொலி அசைகிறது. திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ  பரிகாரத்தையும் செய்ய வேண்டும்.
 
எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்போ அல்லது பின்போ அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம்  செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.
 
ராகு – கேது என்கிற இரு கிரகங்களால் ஏற்படும் தோஷமே காலசர்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம். கேது தோஷத்தை காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் காண வேண்டும். ராகு தோஷத்தை திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் காண வேண்டும். கேது தோஷம் நீங்கினால் ஞானம் வாரி வழங்கும். புத்தி தெளிவு  பெறும். பக்தி அறிவு ஜொலிக்கும்.