1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (13:03 IST)

ரொம்ப அட்வான்ஸா யோசிப்போம்ல..! வேப்பிலை கட்டி வலம் வரும் பேருந்துகள்!

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் பயணிக்கவே பயந்து வரும் நிலையில் கோயம்புத்தூர் பேருந்துகளில் செய்யப்பட்டுள்ள நூதன ஏற்பாடு பலரை கவர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் முன்னெச்சரிக்கையாக தொடர்ந்து மக்கள் பயணம் செய்யும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கிருமி நாசினிகள் தொடர்ந்து தெளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோயம்புத்தூர் பகுதியில் காந்திபுரம் – செம்மேடு வழியாக இயக்கப்படும் அரசு பேருந்தில் வேப்பிலை, துளசி ஆகியவற்றை மாலையாக கட்டியுள்ளனர். வேப்பிலை, துளசி காலம்காலமாக கிருமிநாசினியாக பயன்படுவதால் அவற்றை கட்டியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தாலும், கொரோனா தடுப்புக்கு இவை பயன்படுமா என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் உள் இருக்கைகள், ஜன்னல்கள், முகப்புகள் என அனைத்து பகுதிகளிலும் வேப்பிலை கட்டியபடி வலம் வரும் இந்த பேருந்து தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.