திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (11:23 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலி: முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

MK Stalin
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் ஆய்வு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் இந்த ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது. ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதால் இந்த ஆய்வுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran