பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. தேவர் குருபூஜையில் பங்கேற்பு..!
ஒவ்வொரு வருடமும் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை விழா நடைபெறும் என்பதும் இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நடைபெற உள்ள நிலையில் இந்த குரு பூஜையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் அவர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் மட்டுமின்றி அதிமுக தலைவர்கள், ஓ பன்னீர் செல்வம், பாஜக பிரமுகர்கள், காங்கிரஸ் மற்றும் மற்ற அரசியல் கட்சியின் பிரமுகர்களும் பசும்பொன் சென்று தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran