செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 மார்ச் 2022 (08:47 IST)

5 மாநில தேர்தல் முடிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏன் கருத்து கூறவில்லை?

5 மாநில தேர்தல் முடிவு நேற்று வெளியாகி அதில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவு குறித்து தமிழக முதல்வர் ஏன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 
திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 5 மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்ததை அடுத்து அவர் மௌனமாக இருக்கின்றாரா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
 
 முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறைந்தபட்சம் ஆம் ஆத்மி கட்சிக்காவது தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர் 
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்ற கனவில் இருக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.