வெள்ளிப் பதக்கம் வென்ற மற்போர் வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
வெள்ளிப் பதக்கம் வென்ற மற்போர் வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
இன்று நடைபெற்ற குத்துசண்டை இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரருடன் மோதிய இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா தோல்வியடைந்த போதிலும் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இதனை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் வாழ்த்து கூறிய நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
மற்போரில் வெள்ளிப் பதக்கம் பெற்று உள்ள ரவிக்குமார் தாஹியா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஒலிம்பிக் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற இரண்டாவது இந்திய மற்போர் வீரர் இவர் என்பதே இவரது அறிய சாதனையின் பெருமையை பறைசாற்றும். அவரது எதிர்கால வெற்றிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த பாராட்டு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது