1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 14 ஜனவரி 2017 (11:20 IST)

இன்று முதல்வர் பன்னீர்செல்வம் பிறந்த நாள்: இப்படியும் ஒரு முதலமைச்சர்!

இன்று முதல்வர் பன்னீர்செல்வம் பிறந்த நாள்: இப்படியும் ஒரு முதலமைச்சர்!

தமிழகம் முழுவதும் மக்கள் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிறந்த நாள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றுதான்.


 

 
 
தமிழகத்தில் முதல்வருக்கு பிறந்த நாள் என்றால் அந்த தினத்தை தொண்டர்கள் அமர்க்களப் படுத்திவிடுவார்கள். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அப்படித்தான். அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அப்படித்தான்.
 
இதற்கு முன்னர் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்றால் அதிமுக தொண்டர்கள் பேனர்கள், போஸ்டர்கள், பட்டாசுகள், இனிப்புகள் என ஒரே கொண்டாட்டமாக இருப்பார்கள். அதே போல திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையும் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள் திமுகவினர்.
 
ஆனால் முதல்வர் பன்னீர்செல்வம் தன்னுடைய பிறந்தநாளையும் பொங்கல் விழாவையும் சத்தமே இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடினார். தனது பிறந்த நாளையொட்டி நேற்று மாலை தனது சொந்த ஊரான பெரிய குளம் சென்றார். இன்று மாலை மீண்டும் சென்னை திரும்புகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.