திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2016 (12:48 IST)

காய்ச்சலில் இருந்து நோய் தொற்றுக்கு மாறிய அப்பல்லோவின் அறிக்கை!

காய்ச்சலில் இருந்து நோய் தொற்றுக்கு மாறிய அப்பல்லோவின் அறிக்கை!

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறிவந்த அப்பல்லோ மருத்துவமனை முதன் முதலாக தனது அறிக்கையில் முதல்வருக்கு நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.


 
 
கடந்த சனிக்கிழமை முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து மருத்துவர் ரிச்சார்ட் அப்பல்லோ வந்தார். அவர் நுரையீரல் தொற்று சிகிச்சைக்கான நிபுனர் ஆவார். இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை தொடர்பான அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை.
 
அதில், தொடர் சிகிச்சையால் முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. லண்டன் மருத்துவர் நிபுனர் ரிச்சார்ட் பீலே முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைக் கேட்டறிந்து அவரை பரிசோதித்தார்.
 
முறையான நோய் ஏதிர்ப்பு மருத்துகள் வழங்குவது, நோய்த்தொற்று சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர் ரிச்சார்ட் பீலே அப்பல்லோ மருத்துவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அவரின் பரிந்துரையின்பேரில், மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையின் அடிப்படையில் முதல்வரின் உடல்நிலை நன்கு குணமடைந்திருப்பது தெரியவந்தது. ரிச்சர்டின் ஆலோசனைப்படி, மேலும் சில நாள்கள் முதல்வருக்கு ஓய்வு தேவைப்படுவதால், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
அப்பல்லோ மருத்துவமனை முதன் முதலாக முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து இந்த அறிக்கை மூலம் கூறியுள்ளது. முதல்வருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு என கூறிவந்த அப்பல்லோ மருத்துவமனை தற்போது அவருக்கு நோய்தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியிருக்கிறது.