வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை - முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் !!
குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்.
தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் பிரச்சார பணிகள் முடிந்த நிலையில், சமீபத்தில் கொரோனா ஊரடங்கு குறித்த ஆலோசனையிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று அவர் குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்கு முன்னதாக நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் 3 நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்க முதல்வருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.