திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (11:49 IST)

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல்: உளவுத்துறை போலீஸ் எச்சரிக்கை!

தமிழகத்தில் சேலம், கோவை பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்ய உள்ள நிலையில் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை உளவுப்பிரிவு எச்சரித்துள்ளது.

ஜூன் 24 முதல் 26ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம், கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ஆய்வு பணிகளுக்காக செல்கிறார். அதன்படி இன்று முதல்வர் சேலம் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு மத அடிப்படைவாதிகளாலும், தமிழினவாதிகளாலும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என உளவுத்துறை போலீஸார் எச்சரித்துள்ளனர். இதனால் முதல்வருக்கு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் பயணிக்கும் சேலம், கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், அங்கு செல்லும் வழிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட காவல் ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.