மணல் விற்பனை பற்றி கேட்ட நிருபர்: ஓட்டம்பிடித்த முதல்வர் பழனிச்சாமி!
மணல் விற்பனை பற்றி கேட்ட நிருபர்: ஓட்டம்பிடித்த முதல்வர் பழனிச்சாமி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற பின்னர் தலைமைச்செயலகத்துக்கு வந்தார். தலைமைச்செயலகம் வந்த அவர் முக்கியமான 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதன் பின்னர் அவர் பத்திரிகையாளர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நிரூபர் ஒருவர் கேட்ட கேள்வியை சற்றும் எதிர்பாராத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் செய்தியாளர் சந்திப்பை நிறுத்தி விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார்.
மணல் விற்பனையை அரசே ஏற்று நேரடியாக நடத்துமா என அந்த நிரூபர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர், என்னை பதில் கூற என யோசித்தவாரு அதற்கு பதில் அளிக்காமல் இப்போது அறிக்கையாக கொடுத்ததில் நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் உள்ளது. வந்துள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி, வணக்கம் என கூறிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார். பத்திரிகையாளர்கள் தொடர்ந்து சார் சார் என பலமுறை அழைத்தும் அவர் பேட்டியை தொடரவில்லை.
மணல் விற்பனயை பற்றி கேட்டதும் பதில் அளிக்காமல் சென்றதற்கு காரணம், அவர் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தபோது, கார்டன் வட்டாரத்துக்கு நெருக்கமான சேகர் ரெட்டி அரசின் மணல் அள்ளும் பணிகள் பலவற்றை கான்டிராக்ட் எடுத்து மேற்கொண்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் சம்மந்தியின் பிசினஸ் பார்ட்னரும் ஆவார் என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.