புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (12:05 IST)

குரோம்பேட்டை போத்தீஸ் கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா!

சென்னை குரோம்பேட்டை போத்தீஸ் கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ணமாலில் 240 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா உறுதியானதை அடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலால் குரோம்பேட்டை போத்தீஸ் மூடப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னதாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பணிபுரியும் 30 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், தற்போது குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டது என்பது கூடுதல் தகவல்.