வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (11:58 IST)

பிடிபட்ட சின்னதம்பி யானை : வனத்துறையினர் அதிரடி

இரண்டு வாரங்களாக தண்ணி காட்டி வந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மயக்கஊசி போட்டு பிடித்துள்ளார்கள்.
 
கோவை மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததை அடுத்து கடந்த மாதம் சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். அதன்பின் வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது. 
 
ஆனால் சின்னத்தம்பி மீண்டும் ஊருக்குள் வந்ததால் அந்த யானையை கும்கி யானையை வைத்து விரட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2 வாரங்களாக உடுமைலை பகுதியில் முகாமிட்டு வந்த சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்துள்ளனர். சின்னத்தம்பியை சுயம்பு, கலீம் ஆகிய இரண்டு கும்கி யானைகளின் உதவியிடன் வண்டியில் ஏற்ற வனத்துறையினர் போராடி வருகின்றனர். சின்னத்தம்பியை அடர்ந்து காட்டுப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.