1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 13 மே 2020 (18:43 IST)

அனைத்து தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்: முதல்வர் பழனிச்சாமி பேச்சு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது அனைத்து தொழிலாளர்களும் விரைவில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று உறுதியளித்தார்.
 
மேலும் இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது என்றும், மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
 
கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்படும் என்று கணித்து முன்னரே வியாபாரிகளை எச்சரித்தோம் என்றும், கோயம்பேடு வியாபாரிகள் ஒத்துழைப்பு தராததால் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்றும் அதுமட்டுமின்றி மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என்றும் முதல்வர் தெரிவித்தார். மேலும் கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய முதலில் வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றும், நிலைமையை உணர்ந்து வியாபாரிகளை அரசுக்கு ஒத்துழைப்பு தர கோரினோம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
 
வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், அதேபோல் தமிழகத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் விரைவில் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் தெரிவித்தர்.
 
தடை செய்யப்பட்ட பகுதியை தவிர மற்ற இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் என்றும், பணிக்கு செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.