1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (08:26 IST)

”இது நம்ம சென்னை.. நம்ம செஸ்” – ஆவின் பால் பாக்கெட்டுகளில் விளம்பரம்!

Chess Olympiad
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்த விளம்பரம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் இடம் பெற்றுள்ளது.

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28ம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழ்நாடே கோலாகலமாக தயாராகி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனி பாடல் வெளியிட்ட நிலையில், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் பலகை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் செஸ் ஒலிம்பியாட் தொடங்க உள்ள நிலையில் சென்னை முழுவதும் பல பகுதிகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் “இது நம்ம சென்னை.. நம்ம செஸ்” என்ற வாசகங்களுடன் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் இடம்பெற்றுள்ளது.