சென்னையில் வெளுத்து வாங்கும் மழை: வானிலை மையம் எச்சரிக்கை!!
சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தென் மேற்கு-மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.