சென்னை திருவொற்றியூர் இடியாத வீடுகளில் இருந்தும் வெளியேறும் மக்கள்!
சென்னை திருவொற்றியூர் இடியாத வீடுகளில் இருந்தும் வெளியேறும் மக்கள்!
சென்னை திருவொற்றியூரில் நேற்று குடிசை மாற்று வாரியத்தின் அப்பார்ட்மெண்ட் ஒன்று இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் தற்போது அதன் அருகிலுள்ள இடியாத வீடுகளில் இருந்தும் மக்கள் வெளியேறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருவெற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளையும் வல்லுநர் குழு ஆய்வு செய்ய இருப்பதால் உடனடியாக மக்கள் வெளியேற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்று வாரியத்தில் மொத்தம் 136 வீடுகள் இருக்கும் நிலையில் 18 வீடுகளின் தரம் பற்றிய மாதிரிகளை ஆய்வு குழுவினர் செய்து வருகின்றனர் மேலும் 77 வீடுகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து காலி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் எங்கே செல்வது என தெரியாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.