வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 7 அக்டோபர் 2024 (18:22 IST)

இன்று தான் பள்ளி திறப்பு.. அதற்குள் 13ஆம் தேதி வரை விடுமுறை அளித்த சென்னை பள்ளி..!

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நாளை முதல் மீண்டும் பள்ளிக்கு விடுமுறை என்றும், 13 ஆம் தேதி வரை  விடுமுறை நீடிக்கும் என்றும் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மயிலாப்பூரில் உள்ள டொமினிக் சேவியர் மெட்ரிக் பள்ளி அருகில் நடந்த மெட்ரோ பணி காரணமாக பள்ளி கட்டிடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து பெற்றோர்கள் திடீரென போராட்டம் செய்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெற்றோர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பள்ளியில் உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்படும் என்று பள்ளி நிர்வாகம் உறுதி அளித்தது.

அடுத்த போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், பள்ளியில் பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக நாளை முதல் 13ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில், 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று இடத்தில் வகுப்புகள் நடக்கும் என்றும், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எல்கேஜி முதல் ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 13ஆம் தேதி வரை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva