வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (11:31 IST)

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பயங்கர தீ! – தீயணைப்பு பணிகள் தீவிரம்!

Fire
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்டு திடீர் தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தரைதளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மேல் தளத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் மக்கள் வெளியேற இயலாத சூழல் உள்ளது. மேலும் தரைதளம் எரிவதால் உண்டாகும் புகை மேல்தளங்களில் புகுவதால் மக்கள் சுவாசிக்க சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.