தமிழகத்தில் தொடர்ந்து வெயில் அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..!
தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் தொடர்ந்து வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழக முழுவதும் கோடை காலம் போலவே வெயில்ல கொளுத்தி வருகிறது என்பதும் இயல்பை விட இரண்டு முதல் நான்கு சதவீதம் வெப்பம் அதிகமாக பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்றும் நாளையும் தமிழகத்தில் இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தொடர்ந்து சில நாட்கள் வெயில் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ஏப்ரல் மே என்ற கோடைகாலம் முடிவடைந்து இயல்பான வெப்பநிலை திரும்பும் என்று பொதுமக்கள் காத்திருந்த நிலையில் மீண்டும் வெயில் கொளுத்தி வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran