Daily Horoscope
✕

மெரீனா மூடப்படுமா? சென்னை மாநகராட்சி எச்சரிக்கையால் பரபரப்பு

Written By siva
Updated: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (19:06 IST)
மெரீனா மூடப்படுமா? சென்னை மாநகராட்சி எச்சரிக்கையால் பரபரப்பு
சென்னை மெரினா கடற்கரையில் சமீபத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் மெரினாவை மூடும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மெரினாவுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது சென்னை மெரினாவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இதனை அடுத்து சென்னை மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மெரினாவில் குவிந்தனர். இந்த நிலையில் கட்டுக்கடங்காத கூட்டம் மெரினாவில் குவிந்து வருவதை அடுத்து மக்கள் மிக அதிக அளவுக்கு மீறி கூடினால் சென்னை மெரினாவை மீண்டும் மூடப்படும் நிலை ஏற்படும் என சென்னை மாநகராட்சியின் துணை மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

வெற்றி பயணம் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.. ஆனால் இதை செய்து கொடுங்க: தனியார் பேருந்து உரிமையாளர்கள்..

இடைத்தேர்தலில் வெற்றி!. உடனே அன்புமணிக்கு போட்ட முதல்வர் விஜய்!...

ஒப்போ அறிமுகம் செய்யும் ஃபைண்ட் X10 சீரிஸ் ஸ்மார்ட்போன்.. வெளியாகும் தேதி அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments