1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (16:37 IST)

கோயில் திருவிழாக்களில் பக்திக்கு பதில் வன்முறை: உயர்நீதிமன்றம் வேதனை..!

chennai highcourt
கோவில் திருவிழாக்களில் பக்திக்கு பதில் வன்முறை தான் அதிகமாக இருக்கிறது என உயர்நீதிமன்றம் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளது. 
 
சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவுக்கு பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 
யார் பெரியவர் என்பதை நிரூபிக்கவே கோயில் விழாக்கள் நடத்தப்படுகின்றன என்றும், கோயில் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது என்றும், வன்முறைகள் வெடித்தால் கோயில்கள் இருப்பதே அர்த்தமற்றதாகி விடுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்,.
 
சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தெரிவித்த இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva